நான் படிக்கும் சில தமிழ் புத்தகங்களில், பிடித்த படைப்பாளிகளில் ஒருவர்
S.ராமகிருஷ்ணன்.ராமகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது ஆனந்த விகடன் மூலமே
அதுவும் சிறுது வெளிச்சம் மூலமாகதான்.என் கல்லூரி பணிகளால்,எல்லா
இதழ்களையும் படிக்க காலம் அனுமதிக்கவில்லை.ஒரு முறை சென்னையின் புத்தக
விழாவில் தான் சிறுது வெளிச்சம் முழு தொகுப்பும் கண்டேன்,யோசிக்கவில்லை
வாங்கிவிட்டேன்.தலைப்பு தான் சிறிது வெளிச்சம் ஆனால் புத்தகத்தில்
கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் சூரிய வெளிச்சம்.நம் வாழ்வில் அன்றாடம்
நடக்கும் சின்ன சின்ன விஷயங்களும் நம்மை சுற்றி இருபவர்களுள் எவ்வளவு
பெரிய பாதிப்புகள் உண்டாக்கும் என்பதை இந்த புத்தகம் மூலம் அறிந்து
கொண்டேன்.இப்புத்தகத்தின் மூலம் உலக சினிமாவையும் தெரிந்து
கொண்டேன்,புத்தக்கத்தில் குறிபிட்டுள்ள அநேக படங்களும் ரசித்து
விட்டேன்.உலக சினிமா என்றால் ஹாலிவுட் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள்
அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.இந்த புத்தகத்தின் ருசியை நான்
அனுபவித்தேன் ,என் நண்பர்களுக்கும் ருசிக்க கொடுத்தேன்,அவர்களும் இப்பொழுது
ராமகிருஷ்ணனின் நூலை விரும்பி வாசிக்கிறார்கள்.ராமகிருஷ்ணனின்
“துணைஎழுத்து” “நடந்து செல்லும் நீருற்று” “உபபாண்டவம்” ஆகியவையும்
கட்டாயம் படிக்க வேண்டியவை.”மழைமான்” “தேசாந்திரி” “பிகாசோவின் கோடுகள்”
படிக்க காத்துக்கொண்டிருகிறேன்,நேரம் இல்லை.
பி.கு. இது என் முதல் தமிழ் வலைப்பதிவு,தவறிருப்பின் மன்னிக்கவும்,இனி எழுதும் வலைபதிவில் பிழைகளை தவிர்க்க நண்பர்களின் உதவியை நாடலாம் என யோசித்து இருக்கிறேன். நன்றி
பி.கு. இது என் முதல் தமிழ் வலைப்பதிவு,தவறிருப்பின் மன்னிக்கவும்,இனி எழுதும் வலைபதிவில் பிழைகளை தவிர்க்க நண்பர்களின் உதவியை நாடலாம் என யோசித்து இருக்கிறேன். நன்றி
No comments:
Post a Comment