Search This Blog

Thursday, 20 June 2013

பிரியாணி

பிரியாணி என்று சொன்னாலே போதும்,எனக்கு பசிக்க ஆரம்பித்துவிடும்,நாள் கிழமை பார்பதில்லை எப்படியாவது பிரியாணி ருசித்திடுவேன்.வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்தார் சூப்பர் ஸ்டார்,என் வாழ்க்கையை பிரியாணி பிரியாணியாகவே பிரித்திடுவேன்.கல்லூரி வரை அம்மாவின் பிரியாணி தான்,கல்லூரி நாட்களில் போரூர் ஆற்காடு பிரியாணி,கல்லூரியின் கடைசி நாட்களில் வடபழனி ஸ்டார் பிரியாணி,கொஞ்ச நாட்கள் நுங்கம்பாக்கம் மலபார் பிரியாணி,இப்போ விழுப்புரம்  வாங்க சாப்பிடலாம் பிரியாணி.எல்லா ஊர்களில் பிரியாணி ஒரே மாதிரி சுவைப்பதில்லை,அனால் ஒவ்வொரு பிரியாணியும் சூப்பர் சுவை .பிரியாணி,அக்பர் மன்னருக்கு மிகவும் பிடித்தது,அக்காலத்தில் பிரியாணி செய்முறை ரகசியமாகவே இருந்தது.அனால் இன்று கன்னியாகுமரி வரை பிரியாணி பரிமாறாத ஊர் இல்லை.நண்பர்களுடன் ஏலகிரி செல்லும் வழியில் கண்டிப்பாக வாணியம்பாடி அகமதியா உணவகத்தில் பிரியாணி சுவைக்காமல் மலை ஏறுவது இல்லை.மலையில் இருந்து இறங்கியதும்,வண்டி நிற்பது ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையில்,அப்படியே பக்கத்து கடையில் ஆளுக்கு 4 மக்கன் பேடா வாயில் போட்டுக்கொண்டால் தான் ஏலகிரி பயணம் முற்று பெறும்,இல்லையெனில் எதோ விட்ட குறையாகவே இருக்கும்.பல வருடங்களுக்கு முன் நண்பனின் சொல் கேட்டு கிருஷ்ணகிரி சித்தி ஹோட்டலில் சாப்பிட்ட மட்டன் பிரியாணி மறக்கவேமுடியாது,மறு முறை சாப்பிட வாய்ப்பு அமையவில்லை.வாய்ப்பு கிடைத்தால் விட போவதில்லை.பல முக்கியமான திருமணங்களை தவறவிற்றுருகிறேன்,அனால் பிரியாணி பரிமாறப்படும் நிக்காஹ் நிகழ்ச்சிகளை தவறவிட்டதில்லை.எனக்கும் என் நண்பர்களுக்கும்,வெளியூர் பயணம் செய்யும் போது சொல்லபடாத விதி ஒன்று உண்டு,அதாவது வெளியூரில் கண்டிப்பாக அசைவம் தான்,எக்காரணத்திற்காகவும் அசைவத்தை விடுவதில்லை,செல்லும் ஊரில் எதாவது ஒரு கடையில் விசாரிப்போம்,அல்லது அந்த ஊரில் உள்ள நண்பரிடம் கேட்டு பிரியாணி சாப்பிட்டு தான் கிளம்புவோம்.பிரியாணிக்காக 50 கி.மீ வெட்டியாக பயணித்ததும் உண்டு.பிரியாணி சாப்பிடாது,பிடிக்காது ஆள் இருக்க முடியாது,வெஜிடபிள் பிரியாணியும் உண்டு அல்லவா? எத்தனை வகையான பிரியாணி இருந்தாலும் எனக்கு எப்பொழுதும் பிடித்தது என் அம்மாவின் பிரியாணி.அநேகமாக எல்லாருக்கும் பிடித்தது.போன முறை பிரியாணி பற்றி ஆங்கில வலைபதிவு  செய்யும் போது,மதிய உணவு பிரியாணி.அனால் இன்று காலையிலே,பிரியாணி இல்லை,நானும் என் நண்பனும் நடை பயிற்சியின் போது பேசியது பிரியாணி பற்றி :-)

No comments:

Post a Comment