வணக்கம் ஜி,வாங்க ஜி,சரி ஜி,மேற்சொன்ன இந்த வார்த்தைகள்
கேட்காமல்/சொல்லாமல் நாட்கள் கழிவதில்லை.எனக்கு ஆச்சரியமுட்டுவது “ஜி”
தான்,எனக்கு தெரிந்த அநேக நண்பர்களும் “ஜி” என்பதை எல்லா
வாக்கியங்களுக்கும் பின்னொட்டுவதை தறுவதில்லை.என் தாய்மொழி தமிழ்
இல்லாததால் “ஜி” என்பது பெரியவர்களுக்கு மரியாதை சேர்க்கும்
சொல்லாகும்.ஆனால்,இன்று “ஜி” என்பது தமிழ் சொல்லாகவே
மாறிவிட்டது(பஸ்,செல்போன் பலருக்கு தமிழ் வார்த்தையே).எனக்கும் ரொம்ப
நாளாகவே இந்த “ஜி” வரலாறு பற்றி பயங்கர சிந்தனை,அப்போ தான் தல அஜித் நடித்த
“ஜி” திரைப்படம் நினைவுக்கு வந்தது.நானும்,என்னை சுற்றியுள்ள அநேக
நண்பர்களும் தல ரசிகர்கள்தான்.ஜி திரைப்படம் வருவதற்கு முன்னால் “ஜி”
அவ்வளவு பரிச்சயமில்லை.தல தீவிரவாதி ஒருவர்,வெளியாகும் எல்லா அஜித்
திரைப்படத்திற்கும் பேனர் வைத்து விடுவார்,அவர் பேனர் வைப்பதற்காகவே
திரையரங்கு வெளி வளாகத்தில் எப்போதும் ஒரு இடம் இருக்கும்,அவர் பேனரை
பார்பதற்காகவே ஒரு கூட்டம் உண்டு. நாங்கள் அவரை தான் “ஜி” என்று
அழைப்போம்,ஜி அவர் நிஜ பெயர்க்கும் பொருத்தமாகவே இருந்தது,இப்படி தான்
ஆரம்பித்தது ஜி பயணம்,அதன் பிறகு தல ரசிகர்கள் அனைவரையும் ஜி என்று தான்
அழைப்போம்,ஜி என்பது தல ரசிகர்களின் அங்கீகாரமாக(கேத்து) இருந்தது.இன்று,தல
ரசிகர்கள் மட்டும் அல்ல அனைவரும் “ஜி” போட்டு தான்
பேசுகிறார்கள்.எதிர்காலத்தில்,”ஜி” தமிழ் சொல்லாக அங்கீகரிக்கப்பட்டால்
அந்த பெருமை தல ரசிகர்களுக்கு தான்!
No comments:
Post a Comment